Saturday, 8 September 2012

கட்டளைய கீதம் எனும் தமிழ் இசை வடிவில் உருவான பாடல்:


ஷண்முகப்ரியா என்னும் கர்நாடகப் இராகத்தில் அமைந்துள்ள பாடல் என்றாலும் இது கட்டளைய கீதம் எனும் தமிழ் இசை வடிவில் உருவான பாடல் என்று கூறலாம் .








இங்குக் கூறப்படும் கட்டளையைச் சந்தம் என்று கூறலாம். பாடலில் வரும் எழுத்தோசை அளவுக் கூறுகளைக் கட்டளை என்பர்.
 கட்டு + அளவு - கட்டப்பட்ட அளவு - கட்டளை
இயல் தமிழில் கட்டளைக் கலித்துறை, கட்டளைக் கலிப்பா என்ற பாவகைகள் உள்ளன. இவை எழுத்து எண்ணிப் பாடப்படும் பாடலாகும். இயல் தமிழில் வரும் கட்டளை எழுத்து எண்ணிக்கை உடையது. இசைத்தமிழில் வரும் கட்டளை எழுத்தோசை பற்றியதாகும். செய்யுளில் வரும் கட்டளை யாப்புப் பற்றியது. இசையில் வரும் கட்டளை தாளம் பற்றிய சந்தமாகும்.


கட்டளைய கீதம்

  இசைத்தமிழில் கட்டளைய கீதம் என்ற இசை உருப்படி பற்றி அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். (சிலம்பு 3:10-11) தாளத்திற்கு ஏற்ப எழுத்தசைவுகளையமைத்துக் கட்டிய சிறு பாடலைக் கட்டளைய கீதம் என்பர். தற்காலத்தில் இதனைக் கீதம் என்று அழைக்கின்றனர். இது தாளத்திற்கேற்ற எழுத்தளவு உடைய உருப்படியாகும். இவ்வாறு தாள அனுமானத்துடன் எழுத்துகளைக் காட்டும் பொழுது நெடிலைக் குறிலாகவும் குறிலை நெடிலாகவும் ஒலிக்கும் சூழலும் தோன்றும். இங்கு, தாளச் சந்த அமைதியே முக்கிய இடம் பெறும். உதாரணமாக, திருப்புகழ்ப் பாடலில் ஒரு தொடரைக் காண்போம்.

தத்தன தனதன தத்தன தனதன  


தத்தன தனதன தனதான
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணி


இதில் கைத்தல என்ற சொல்லின் முதலில் வரும் கை என்பது நெடிலாகும். ஆனால் சந்தத்தில் இரு மாத்திரை பெறும் நெடிலாக இடம் பெறாமல் ஒரு மாத்திரை பெறும் குறிலே சந்தமாக வந்துள்ளது. இசை மரபில் எழுத்துகள் தத்தமக்குரிய மாத்திரை அளவிலிருந்து மாறி ஒலிப்பதும் ஒற்றெழுத்துகள் நீட்டி ஒலிப்பதும் ஆகிய மரபுண்டு என்று தொல்காப்பியரும் கூறியுள்ளார்.

அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர் (தொல்.எழுத்து. 33)
This is called Akshara chanda and Matra chanda Respectively. A Reference to this by my friend and Mirthanga vidvan Poovalor Srinivasan Sriji. That's the reason great seer of Conjivaram did not recommend Mantras to be sung in a raga and for tala, because Matra calculation will change, nullifying the effect of Mantras....


http://yogasangeeta.org/images/Music%20Articles/Laya%20-%20Nada.pdf

Raga: Shanmukhapriya

No comments: