இப்பாடல் தியாகராஜா சுவாமிகள் அட்டன இராகத்தில் அருளிய பாடல் ஆகும் . இளையராஜா அவர்கள் இப்பாடலை சகர சங்கமம் என்னும் திரை ஓவியத்தில் பயன் படுத்தியிருப்பார் . இது தமிழ் இசை மரபில் யாழ்முரி என்னும் வகையைச் சேர்ந்தது.
"யாழ்முரி" என்று இதற்குப் பெயர் வரக் காரணம் என்ன? யாழ் இசைக் கருவியை வைத்துப் பாட வேண்டிய பாடலா இது? அதனால் தானோ இப் பெயர்?
முரி - ஒருவகை இசைப் பாடல். யாழில் அமைத்துப் பாடும் இசையமைப்பாதலின் 'யாழ்முரி' எனப் பெயர் பெற்றது.
திருஞானசம்பந்தர் தந்த அற்புதமான சந்த அமைப்புப் பதிகங்களில் ஒன்று யாழ் முரியாகும். இது காரைக்கால் அடுத்துள்ள தருமபுரத்தில் பாடப்பட்டது. மேகராகக் குறிஞ்சிப் பண்ணில் அமைந்ததாகும். இதனை நீலாம்பரி இராகத்தில் பாட வேண்டும். ஆனால் தற்காலத்தில் இதனை அடாணா இராகத்தில் பாடி வருகின்றனர். யாழ் முரியைச் சிலர் பண்ணாகவும் கூறுவர். இது தவறு. இது பண்ணன்று , பதிகப் பெயர் என்பது பலரின் முடிவு.
இது முரி என்ற இசை வகைக்குரிய பாடலாகும். எடுத்த இயலும் இசையும் முரித்துப் பாடுதலின் இது முரியாயிற்று. இசையின் உள்ளோசைகள் நிறைந்த பதிகமாகும். தற்காலத்தில் இசைவாணர்கள் பாடிவரும் பல்லவி பாடும் முறைக்கு இப்பதிகம் முன்னோடியான பதிகமாகும். திருமுறைகண்ட புராணம் இதற்குத் தனிக் கட்டளை கூறவில்லை. இது மேகராகக் குறிஞ்சியின் கட்டளையின் பாற்படும்.
http://www.tamilvu.org/courses/degree/d051/d0513/audio/d0513523.rm < - இங்கே சொடுக்கவும் பாடலை கேட்க
தான தனத்தனனா - தன - தானன தானனா
தனா - தனா - தனா - தனா - தனதன தனனா
மாதர் மடப்பிடியும் மட அன்னமு மன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படைநின் றிசை பாடவு மாடுவர்
அவர் படர் சடைந் நெடு முடியதொர் புனலர் (1.136.1)இதில்
தான - 1
தனத்தனனா
- 1 தன - 1 தானன - 1 தானனா - 1 தனா - 4 தனதன - 1 தனனா - 1
----- 11 -----
இதில் சந்தம் முரிந்து வருகிறது.
மற்றுமொரு அழகிய பாடல்....
No comments:
Post a Comment