Wednesday 16 February 2011

சூரியனிடமிருந்து பிரம்மாண்ட சூரிய ஒளிவீச்சு

சூரியனிடமிருந்து பிரம்மாண்ட சூரிய ஒளிவீச்சு இந்த வாரம்


அன்பர்களே ,

நமது சூரியன் என்பது ஒரு நட்சதிரம் என்பது நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இது பல ஆயிரம் டிகிரி வெப்பம் உடையது என்பதும் அறிவீர்கள்.
சில சமயம், சூரியனில் வெப்பம் குறைந்த பகுதிகள் உருவாகும் அதன் பெயர் சன்ஸ் ஸ்பாட் / சூரிய புள்ளி . இது சூரியனின் பிற பகுதிகளை விட வெப்பம் குறைந்த பகுதியாகும்.

இப் சூரிய புள்ளியில் இருந்து சில சமயம் கந்த அலை வெடித்து சிதறும். அக் கந்த அலை யானது நமது பூமியை நோக்கி வரும் போது, நமது வெளிமண்டலத்தை ஓரைய கூடும்.
இந்த வாரம் இதுவரை இல்லாதது போன்று, சூரியனிடமிருந்து பிரம்மாண்டமான ஒளி வாயு வீச்சு நடந்து வந்திருக்கிறது. இதனால், பில்லியன் டன் எடையுள்ள அதிவெப்ப வாயுக்கள் விண்வெளியில் சூரியனால் வீசி எறியப்பட்டன. இவற்றில் கொஞ்சம் பூமியை நோக்கியும் எறியப்பட்டன.


சூரியனை தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்ததிலிருந்து இதுபோன்ற ஒரு விஷயத்தைப் பார்த்ததேயில்லை என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதன் மூலம் பூமியில் புவி காந்த புயல்கள் எந்த அளவு விளைவை ஏற்படுத்தும் என்று விண்வெளி தட்பவெப்பவியலாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

மிகச்சக்தி வாய்ந்த சூரிய ஒளிவாயு வீச்சுக்கள் 'X ' அளவுக்குறியீட்டில் அளவிடப்படுகின்றன. இந்த வாரம் X2.2-class நிகழ்ச்சிகளாகக் குறிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், சூரிய புள்ளி இடம் 1158 என்று குறிக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து வந்த மேற்கண்ட ஒளிவீச்சுக்கள் காரணமாக இந்த இடம் மிகவும் அதிகமாக இயங்கும் ஒளிவீச்சு இடமாக அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்படுகிறது. 1158 மேற்கு சூரியப் பகுதியில் இருப்பதால், இதிலிருந்து வரும் ஒளிவாயுவீச்சு பூமியை நோக்கி வந்து கொண்டிருகிறது.


மேலும் இது பூமியை தாக்கும்போது, நமது பூமியின் காந்த கவசம் தொடர்ந்து காந்த துகள்களால் 24 மணிநேரத்திலிருந்து 48 மணி நேரம் வரை தாக்கப்படும் என்றும் இதனால் புவிகாந்தப் புயல்கள் தோன்றும் என்றும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த காந்தப்புயல் பூமியைச் சுற்றிவரும் செயற்கைக்கோள்களையும் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலில் வரும் எலக்ட்ரான்கள் இந்த செயற்கைக்கோள்களில் இருக்கும் மைக்ரோ சிப்புகளை பாதித்து அழிக்கும் என கருதுவதால், இந்த செயற்கைக்கோள்களின் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.


சிற்றலை ஒலிபரப்பில் வரும் வானொலியும் இதனால் பாதிக்கப்படும்.





No comments: