Saturday 5 October 2024

இந்து மகா சமுத்திரம் என்ற பெயர் காரணம்

என் முகநூல் பக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி நான் இட்ட பதிவின் மறு பதிவு இது. 



அரேபியர் இந்த பகுதி பெருங்கடலுக்கு வைத்த பெயர் இது. பாண்டியர், சோழர்கள், சேரர்கள் இந்த பகுதி கடலை அப்படி ஒரு கட்டுபாட்டில் வைத்து இருந்தார்கள். அவர்கள் இந்துக்கள். அரபி, துருக்கிய ஏன் பல மத்திய ஆசியா, மற்றும் கொரியா, சீன மொழிகளில் நமக்கு ஹிந்த் என்று பெயர். அதில் இருந்து வந்தது ஹிந்துஸ்தான். இந்தியா என்ற பெயர் அதில் இருந்து வந்த இண்டிகா என்ற கிரேக்க சொல்லின் ஆங்கில தழுவல் இந்தியா. உலகில் ஒரு  இனத்தின் மற்றும் நாட்டின் பெயரில் உள்ள ஒரே பெருங்கடல் இந்துமகா சமுத்திரம். பிரெஞ்சு மொழியில் லாண்ட் L'Inde என்று கூறுவார்கள் இந்தியாவை.

சிந்து நதியை வைத்து அவர்கள் ஹிந்த் என்று அழைத்தார்கள். அரபிக் கடலை அரேபியர் இந்துக் கடல் அல்லது bahr alhind بحر الهند என்று அழைப்பர். அரபிக் கடல் என்பது இந்து மஹா கடலின் ஒரு பகுதி. இந்தியாவை அவர்கள் almuhit alhindiu المحيط الهندي என்று அழைத்தார்கள்.

இந்து மகா சமுத்திரம் என்ற இன்றைய பெயர் (பொது வருடம் CE) 1515 ஆம் வருடம் லத்தின் மொழியில் Oceanus Orientalis Indicus ("Indian Eastern Ocean") என்று கொலம்பஸ்/ வாஸ்கோடகாமா காலத்தில் இந்த கடலை ஐரோப்பியர் அழைத்தனர், அதன் ஆங்கில  மொழி பெயர்ப்பு தான் இந்தியன் ஓசியன் என்ற இன்றைய சொற் பதம்.

சமஸ்கிரத மொழியில் இந்த கடலுக்கு பெயர் இரத்நாகரா Ratnakara. இலங்கையில் உள்ள ஒரு ஊர் பெயர் இரத்னாபுர. இரத்னாகரா என்றால் இரத்தினங்கள் என்று பெயர்.  இன்றும் இலங்கை இரத்னாபுர பகுதியில் இரத்தினங்கள்  கிடைக்கும்.  இலங்கையில்  பலர் வைத்துக்கொள்ளும் இணை பெயர் இரத்னாகரா.

No comments: