This blog is to express my mind, thoughts and scrabbles. A place to express what I am!
Welcome to my scribbles !
▼
Thursday, 28 May 2026
Jupiter Transit
தற்போது வானியல் படி (பதிவு போட்ட நாள் 28/05/2026 23.48 மணி இந்திய நேரம்).
புதன் இருப்பது ரிஷபம்
சுக்ரன் மற்றும் குரு இருப்பது மிதுனம்.
ஜூன் 22 ஆம் தேதி முற்பகல்
குரு கடகத்தில் இருக்கும் வானியல் படி.
பஞ்சாங்கம் படி அல்ல. வானியல் எல்லைகள் வேறு, பஞ்சாங்கம் எல்லைகள் வேறு. குழப்பம் வேண்டாம்.
இடையில் குரு சுக்ரன் 2° குள்ளே இருக்கும்.
படங்கள் இணைத்துள்ளேன்.
வானியல் எல்லைகள் IAU {international astronomical union} என்ற சர்வதேச வானியல் கழகம் ( இங்கு ஒன்றியம் வாராது) வரையறுத்த அலகுகள். பஞ்சாங்கம் அலகுகள் வேறு.
மொத்தம் 88 நட்சத்திர் மண்டலங்கள் உள்ளன. அதில் 13 மண்டலங்கள் zodiac என்ற இராசி மண்டலங்கள் வானியல் படி. பஞ்சாங்கம் படி 12.
இந்திய வானியல் படி சில மேலும் உண்டு அவை இராசி மண்டலங்கள் இல்லை. இங்கும் பஞ்சாங்கம் வேறு இந்திய வானியல் வேறு.
இந்திய வானியல் என்பது arayabtta, பாஸ்கரா வராகமித்ரா, பிரம்மா குப்தா போன்ற சான்றோர் ஆராய்ச்சி செய்தது. ரிக் வேதம் போன்றவற்றில் உள்ளது.
இந்திய வானியல் அறிவியல் ஆய்வு மிகவும் பழமையான ஒன்று.
இந்திய வானியல் அறிவியல் வேறு நவீன (மேற்கத்திய ) வானியல் அறிவியல் வேறு.
படங்களில் உள்ள சிகப்பு -- கோடுகள் மண்டல எல்லைகள் நவீன வானியல் படி.
#IAU #JupiterTransit #Venus # Panchang






No comments:
Post a Comment