1996ல் திரு. கருணாநிதி அவர்கள் மெட்ராஸ் எனும் பெயரை சென்னை என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் இனி ஒன்றாக அழைக்கப்படும் என்று கூறி மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று மாற்றினார் ! அதற்கு அவர் பல வரலாற்றுச் சான்றுகளைச் கூறினார் அனால் உண்மையில் மெட்ராஸ் என்பதும் சென்னை என்பதும் தமிழ் பெயர்கள் அல்ல!
மெட்ராஸ் என்பது Portuguese போர்ச்சுக்கீசியப் பெயர் சென்னை என்பது தெலுங்குப் பெயர்!
1636 வரை இங்கு ஒரு நகரமே இல்லை! ஆங்கிலேயர்கள் புதிதாக நிர்மாணித்த ஒரு நகரம் இது! மெட்ராஸ் என்பது புனித ஜார்ஜ் கோடையில் வாழ்ந்த போர்ச்சுக்கீசியப் மாதேராஸ் குடும்பப் பெயர் மற்றும் பரங்கியர்களுக்கு (Burghers) மீன் பிடித்துக் கொடுத்த செம்படவர் திரு. மதராசன்னின் பெயர்!
எங்கிருந்து வந்தது சென்னை என்ற தமிழ் பெயர்? சென்னை என்பது சென்னப்ப நாயகர் என்னும் தெலுங்குப் வாணிபத் தலைவரின் பெயர் .
மதராசப்பட்டினம் பரங்கியர்கள் குடியிருப்பு WHITE'S TOWN கோட்டைக்கு உள்ளே ! சென்னைப்பட்டினம் - பெரும்பான்மையான தெலுங்கு பேசும் மக்களின் "கறுப்பர் நகரம் " BLACKS' TOWN கோட்டைக்கு வெளியே.
நன்றி: எஸ். முத்தையா - Madras discovered
இப்போழுது சொல்லுங்கள் திரு கருணாநிதி அவர்கள் சொன்ன வரலாற்றுக் காரணம் உண்மையா இல்லையா என்று ?
பரங்கியர் what does this word mean ?
ReplyDelete@ Above:
ReplyDeleteIt means Europeans! Mainly British!