Tuesday, 29 November 2011

தில்லானா மோகனாம்பாள் ஷூட்டிங் ஸ்போட் காணக் கிடைக்காத காணோளி | Thillana Mohanambal Shooting Spot A rare footage

௧௯௬௮-ல் (1968-ல்) மெட்ராஸுக்கு வந்த பிரெஞ்சு  நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் லூயி மல்லே ( Louis Malle) தமிழ்ச் சினிமாவை பற்றிய ஒரு டாகுமென்ட்டரி எடுத்திருக்கிறார். தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த காணோளி எவ்வளவு பெரிய கலைஞர்களையெல்லாம் நாம் இழந்திருக்கிறோம் என்ற ஏக்கத்தைதான் ஏற்படுத்துகிறது. இன்று உருப்படியாக படம் எடுக்கிறார்களோ இல்லையோ?! ‘மேக்கிங் ஆஃப் ஸோ அண்டு ஸோ’ என்று தனியாக ஒரு படத்தை எடுத்து தமது ஹோம் தியேட்டரிலேயே 100 நாட்கள் ஓடவிட்டு சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் மானிட்டரும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல்லை. எவ்வளவு அழகாக அந்த கலைஞர்களுக்கு சொல்லித் தருகிறார் பாருங்கள் தயாரிப்பாளரும் டைரக்டருமான ஏ.பி.நாகராஜன்.

(L'inde Fantôme (1969) by Louis Malle)
video

இந்த டாகுமென்ட்டரியை எடுத்த லூயி மல்லே மிகவும் குசும்பான ஆள் போலிருக்கிறது. சிவாஜி பத்மினி உள்ளிட்ட நமது கலைஞர்களின் மேக்கப் சென்சை பற்றியெல்லாம் செமத்தியாக கிண்டலடித்திருக்கிறார். யூ ட்யூப்பில் படம் ஓடும் இடத்திற்கு கீழ் புறத்திலேயே cc என்றொரு ஐகான் இருக்கிறது. அதை சொடிகினால் (க்ளிக் செய்தால்) ஆங்கிலத்தில் துணை மொழி (சப் டைட்டில்) வருகிறது. படித்து இன்புறுங்கள்....!!


No comments: