Sunday 23 October 2011

ரீதி கௌளை - ஒரு அலசல் | Reethi Gowlai raga - an analysis

து 22ஆவது ‘மேளகர்த்தா’வான ‘கரஹரப்ரியா’வின் ஜன்ய ராகமாகும். (தீட்சிதர் மரபில் ‘நாரீ ரீதிகௌள’என்று பெயர்.)
உபாங்க – வக்ர ராகமான ‘ரீதி கௌள’ அதிகாலையில் பாடப் பொருத்தமானது.



பெண்பால் ராகமான இதன் ஸ்வரங்களாவன :

ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்யமம்,பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் மற்றும் கைஷிகி நிஷாதம்

ஆரோஹணம் : ஸ க ரி க ம நி த நி ஸ்
அவரோஹணம் : ஸ் நிதம கமபம கரிகஸ

(ஆரோஹணத்தில் பஞ்சமம் இல்லை)


6. “கரஹரப்ரியா”

இது 22வது ‘மேளகர்த்தா’ராகமாகும்.இந்த ராகம் முன்னதாக தமிழிசை மரபில்‘செம்பாலைப் பண்’என்று
அறியப்பட்டது.இந்தஸ்தானி இசை மரபில்‘இந்துஸ்தானி காஃபி தாட்’என்றழைக்கப்படும்

இதன் ஸ்வரங்கள்:

ஷட்ஜமம்,சதுஸ்ருதி ரிஷபம் சாதாரண காந்தாரம்,சுத்த மத்யமம்,பஞ்சமம்,சதுஸ்ருதி தைவதம்,கைஷிகி நிஷாதம்.

ஆரோஹணம் : ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி த ப ம க ரி ஸ

ரீதி கௌளை ராகத்தை நல்ல கூரல்  வளம் உள்ளவர்கள் மட்டுமே  பாட முடியும் . கூரல்  வளம் இல்லாதவர்கள் தப்பித்தவறி பாடினால் ஆனந்த பைரவி இராகம் வந்தாலும் வரும்  இல்லாவிடல்  ஸ்ரீ இரஞ்சனி வந்தாலும் வந்து விடும்  காரணம் ரீதிகௌளை ஆரோகணத்தில் மத்யமத்திலிருந்து நிஷாதத்திற்கு quantitate  செய்ய வேண்டும் அதாவது ஒரே தாவாக தாவ வேண்டும் hurdles race  மாதிரி இல்லையேல் பிரச்சனை.

இப்பொழுது ரீதி கௌளை இராகத்தில் உள்ள பாடல்களையும் சில கருத்துகளையும் நோக்குவோம் :

ரீதிகௌளை இராகப் பாடல்களைப் நோக்கும் முன்பு கரகரப்பிரியா இராகத்தை சற்று நோக்குவோம்:

புதிய முகம் ( ௨௦௦௯ | 2009) மலையாளம்
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்
இசை: தீபக் தேவ்



கரகப்ப்ரியா இராகத்திற்கும் ரீதி கௌளை இராகத்திற்கும் ஒரு ஸ்வரம் வித்யாசம். நானே பலமுறை இந்த வித்யாசம் தெரியாமல் கரகரப்ப்ரியவை ரீதி கௌளை என்றும் ரீதி கௌளையை கரகரப்பிரியா என்றும் கூறியுள்ளேன் !

ரீதி கௌளை இராகத்தில் அதிகப் பாடல்கள் எனக்கு தெரிந்தவரை இளையராஜா அவர்கள் படைத்துள்ளார். மேலும், இந்த இராகத்தில் திருவாளர்கள் வித்யாசாகர், ஏ.ஆர். ரகுமான் , ரவீந்திரன் மாஸ்டர், ஜேம்ஸ் வசந்தன்,சரத் மற்றும் கார்த்திக் இராஜா ஆகியோரும் சில பாடல்களை படைத்துள்ளனர்.

அப்பாடல்களை நோக்குவோம்:

ஒரு பொண்ணு ஒரு பையன் - இப்பாடல் ரீதி கௌளை இராகப் சாயலில் (ஸ்கேல்) உள்ள பாடல் திரு. கார்த்திக் இராஜாவின் இசையில்.



இசைப்புயல் ரீதி கௌளையை விட்டு விடுமா? ஏ ஆர் ரகுமான் கர்னாடக இசையைப் பெரும்பாலும் இந்த தலைமுறைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுப்பவர். மேற்கத்திய மற்றும் ஹிந்துஸ்தானி இசைக் கூறுகள் அதிகம் தென்படும் இவர் பாடல்களிலும் அவ்வப்போது சுத்தமான கர்னாடக இசையைக் காணலாம் as a tenuity/slenderness. முதல்வன் படத்தில் ரீதி கௌளையில் ஒரு நல்ல பாடல்

அழகான ராட்சசியே - முதல்வன் ௧௯௯௯ | 1999



என்ற அந்தப் பாடலில் 'குயிலே ஆலங்குயிலே ' என்று இழுக்கும் இடம் தான் ரீதி கௌளையை ரிஃப்ளெக்ட் செய்கிறது / தூக்கி காட்டுகிறது.

ரீதிகௌளை லேசாக ஒலித்தாலும் கண்டுபிடித்து விடலாம். தாழம்பூ வாசம் மாதிரி கூப் என்று இருக்கும். வித்யாசாகர் நல்ல கர்னாடக இசை நுணுக்கம் அறிந்தவர். தூய கர்னாடக இசையைத் தருபவர் இராஜாவை போல் !! 'தம்பி' என்ற படத்தில் ஒரு மெல்லிய ஹிந்துஸ்தானி ஜாடையில் ரீதிகௌளையைப் கொடுத்து இருப்பார். டிப்பிக்கல் வித்யாசாகர் பாணி.'காதலித்துப் பார்' என்ற இடத்தில் இராகமுத்திரை இருக்கிறது.

தீண்ட  தீண்ட - துள்ளுவதோ இளமை திருவாளர்கள் : யுவன் சங்கர் ராஜா மற்றும் விஜி மனுவேல். இப்பாடல் ரீதிகௌளை இராகத்தின் சாயலில் உள்ள பாடல் அதாவது இராகத்தின் ஸ்கேல் !!!

சுடும் நிலவு....சுடாத சூரியன் ! தம்பி மற்றும் ஒரு நல்ல ரீதிகௌளை புதிய இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனிடம் இருந்து : இராகம் என்பது ஒரு சமையல் குறிப்பைப் போன்றது. என்னென்ன பொருட்களைச் சேர்க்கலாம் என்று கூறும். சமையல் குறிப்பைப் பின்பற்றி நூறு பேர் உணவு சமைத்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையாய் இருக்கும். அது போலவே மெட்டுக்களும். ப்ரதொச்மி குருவாயூர் .... - சிந்தூர ரேக்ஹா இசை: சரத் பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத் இசையில் ஒண்ணாம் ராகம் பாடி - தூவான தும்பிகள் ௧௯௮௭ | 1987  அபிமன்யு ௧௯௯௦ | 1990 - ரவீந்திரன் மாஸ்டர் இசையில் கண்டு நான்..... இப்பொழுது இசை அரசன் அவர்கள் ரீதிகௌளை இராகத்தில் செதுக்கிய பாடல்களைப் காண்போம் : கவிக்குயில் ௧௯௭௭|1977 - சின்ன கண்ணன் ௧) ௨) ௩  ) ஒரு ஓடை நதியாகிறது 1983 | ௧௯௮௩ - தலையைக் குனியும் தாமரையே ௪ ) கே. விஸ்வநாத் அவர்கள் தெலுங்கில் நல்ல இசையம்சமுள்ள படங்களைத் தந்தவர். ௧௯௮௫ல்|1984 அவர் இயக்கத்தில் வந்த சிப்பிக்குள் முத்து (தெலுங்கில் ஸ்வாதி முத்யம்) படத்தில் ரீதிகௌளையில் இசை ஞானியும் எஸ். பி. பாலசுப்ரமணியமும் பின்னி எடுத்த 'சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப் பட்ட நாளிலே, ஜனகனின் மண்டபத்திலே மாலை ஏந்தி வந்த ஜானகியை வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க ஸ்ரீ ரா....மச்சந்த்ர முர்த்தி ,கண்ணெடுத்துப் பார்க்க மாட்டாரோ என்று கவலை கொண்டார்களாம் சீதா தேவியின் செல்லத்தோழிகள்.' என்று தொகையறாவாகப் (வசனத்தை இராகத்துடன் பாடுதல்) பாடியிருக்கும் இடத்தில் இராகமும் குரலும் இணைந்து கலக்கும் ஸ்வாதி முத்யம் - இராமா கனவேமிரா / இராமன் கதை கேளுங்கள்  ௫ ) மீட்டத ஒரு வீணை - பூந்தோட்டம் ௨௦௦௭ | 2007 எந்த இசை அமைப்பாளர் ரீதி கௌளைல் பாடலை தந்தாலும் எனது மதிப்பெண் மேஸ்ட்ரோ இளையராஜாவை சாரும் ! அவரைப்போல ஒருவரும் இந்த இராகத்தை செதுக்கியது இல்லை !!! இருவரை ஐந்து ரீதிகௌளை பாடல்களை தந்து உள்ளார் ஒவ்வென்றும் ஒரு சாயல் - ஒரு பரிமாணம். இசை ஞானிக்கு இப்பாடல் சமர்ப்பணம் பிற ரீதி கௌளை பாடல்கள் ( மலையாளம்) Ellupaadam [Neelamizhiyaal ] - Vidhichathum Kothichathum (Kasthoori)1982 - Ravendran Master Pon Kinaavinu - Kinginikkombu - Raveendran - 1983 Hridaya sarovaramunarnnu - Mounaraagam 1983

தீண்டாதே தீண்டாதே - பார்த்தேன் ரசித்தேன் . இசை : பரத்வாஜ்

No comments: